குஜராத் மாநிலம் ஜாம்நகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி( 41). இவர் இதயநோய் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்தார்.. ஜாம் நகரில் மருத்துவப் படிப்பு முடித்த அவர், அகமதாபாத் இதய அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார்.
இதையடுத்து, தன் பணிக்காலத்தின்போது 16 ஆயிரம் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமன நடத்தியுள்ளார்.இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
திங்கட்கிழமை அன்று இரவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபின், வீட்டிற்குத் திரும்பிய அவர் இரவு உணவுக்குப் பின் உறங்கியுள்ளார்.
காலையில், அவர் நீண்ட நேரம் எழாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை படுக்கையில் இருந்து எழுப்ப முயன்றனர்.
ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. எனவே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.