Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் சேம்பியன் கோப்பையை கையில் ஏந்திய முதல்வர் முக.ஸ்டாலின், உதயநிதி

Advertiesment
Stalin- chennai kings team
, செவ்வாய், 6 ஜூன் 2023 (15:53 IST)
ஐபிஎல் -2023, 16 வது சீசன் இறுதிப் போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், சேம்பியன் கோப்பையை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கைகளில் ஏந்திப் பெருமிதம் அடைந்தனர்.

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  கடந்த 29 ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   5வது முறையாக  வென்றது.

இதையடுத்து, சென்னை திரும்பிய சென்னை அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஐபிஎல்- போட்டியில் சென்னை கிங்ஸ் அணி வென்ற சாம்பியன் பட்டத்தை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் கோப்பையை வைத்து சிஎஸ்கே நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்தனர்.

இந்த நிலையில்,  ஐபிஎல் போட்டியில், நடப்பு சேம்பியன் அணியான  சென்னை கிங்ஸ் அணியின் உரிமையாளர் இன்று முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் கோப்பையைக் காண்பித்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ஐபிஎல் போட்டியில் வென்று நடப்பு சாம்பியனாக உள்ள  சென்னை கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் திரு.சீனிவாசன் உள்ளிட்டோர் மாண்புமிகு முதலமைச்சர்  முக.ஸ்டாலின் அவர்களிடம் வெற்றிக் கோப்பையை இன்று காண்பித்து மகிழ்ந்தார்கள். நாமும் அக்கோப்பையை கைகளில் ஏந்தி பெருமிதம் கொண்டோம். அடுத்தடுத்த போட்டிகளிலும் வெல்ல வாழ்த்தினோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு