தீர்ப்பு கூட எழுத தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி: உயர்நீதிமன்ற நீதிபதியின் அதிரடி நடவடிக்கை..!

Siva
திங்கள், 28 ஏப்ரல் 2025 (07:17 IST)
தீர்ப்பு கூட எழுத தெரியாத  மாவட்ட கூடுதல் நீதிபதியை பயிற்சி மையத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அனுப்பிய சம்பவம் அலகாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில், குத்தகை தொடர்பான வழக்கு ஒன்று வந்தபோது, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அமித் வர்மா எந்தவிதமான காரணத்தையும் குறிப்பிடாமல், மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார்.
 
இதை எதிர்த்து மனுதாரர் தரப்பில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், கூடுதல் மாவட்ட நீதிபதி தனது மனுவை பரிசீலனை செய்யவில்லை என்றும், வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட வாதத்தை மட்டுமே பதிவு செய்து கொண்டு மனுவை ரத்து செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், மனுவை தள்ளுபடி செய்த காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, மனுவில் நிராகரிப்பிற்கான காரணங்களை குறிப்பிட்டு கூடுதல் தகவலை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
 
இதனையடுத்து மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வர்மாவுக்கு தீர்ப்பு எழுத கூட தெரியவில்லை என்பதால், உடனடியாக அவர் நீதிபதிகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூன்று மாதம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments