Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சாப்ட்வேர் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி.. 3 பேர் கைது..!

Advertiesment
டிஜிட்டல்  அரெஸ்ட்   மூலம் சாப்ட்வேர் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி.. 3 பேர் கைது..!

Siva

, செவ்வாய், 21 ஜனவரி 2025 (13:04 IST)
சமீபகாலமாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புது வகையான மோசடி நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் இதில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை  பலர் இழந்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஜிட்டல் கைது செய்திருப்பதாக சாப்ட்வேர் பொறியாளரிடம் 11.8 கோடி ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் பொறியாளர் விஜயகுமார் என்பவர் ஒரு மாதமாக டிஜிட்டல் கைது செய்யப்பட்டார் என்றும், மோசடி நபர்கள் காவல்துறை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட தனது சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக மர்ம நபர்கள் கூறி டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருந்த நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தற்போது மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், இதே போல் இன்னும் அவர்கள் பலரை ஏமாற்றி இருப்பது விசாரணை மூலம் தெரியவந்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும், இன்னும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக முதல்வரை அடுத்து கேரள முதல்வரும் எதிர்ப்பு.. யுஜிசி புதிய விதிகள் அமலுக்கு வருமா?