Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல்காந்தி-தேவகவுடா அவசர ஆலோசனை: காங்-மதஜ கூட்டணியில் திடீர் விரிசல்

ராகுல்காந்தி-தேவகவுடா அவசர ஆலோசனை: காங்-மதஜ கூட்டணியில் திடீர் விரிசல்
, திங்கள், 10 ஜூன் 2019 (19:40 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி இருந்து வரும் நிலையில் இந்த ஆட்சி எந்த நேரமும் கவிழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதற்கேற்றாற்போல் சமீபத்தில் குமாரசாமியின் அமைச்சரவையில் இடம் கேட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒருசிலர் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து இன்று அவசரமாக டெல்லி சென்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் இதுகுறித்து அவசர ஆலோசனையை நடத்தி வருகிறார். காங்கிரஸ் தனது அமைச்சர் பதவிகளை விட்டுத்தராவிட்டால் கூட்டணியில் இருந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியேறும் என்றும் தேவகவுடா எச்சரித்துள்ளதாக தெரிகிறது. 
 
webdunia
இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாகவும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு தனது பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுவதால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனல் காற்று அடிக்கும் ஆபத்து: “பெண்களின் கருவுறும் திறன் பாதிக்கப்படலாம் ” - எப்போது உணரப் போகிறோம் நாம் ?