Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வரை வழிமறித்து ”ஜெய்ஸ்ரீராம்” என்று கூறியதால் தடியடி.

முதல்வரை வழிமறித்து ”ஜெய்ஸ்ரீராம்” என்று கூறியதால் தடியடி.
, திங்கள், 3 ஜூன் 2019 (13:39 IST)
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் “ஜெய்ஸ்ரீராம்” என்று கூட்டத்தில் ஒலித்ததால் போலீஸார் தடியடி நடத்தியதில் பலர்படுகாயம் அடைந்தனர். சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்கானா பகுதியில் காரில் சென்ற முதலமைச்சர் மம்தாபானர்ஜியை வழிமறித்து ”ஜெய்ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பியதால் மம்தாபானர்ஜி காரில் இருந்து இறங்கி வந்து கோஷம் போட்டவர்களை கண்டிததார். ”அவர்கள் குற்றவாளிகள் என்றும் என்னிடம் வேண்டுமென்றே அவதூறு செய்கிறார்கள்” என்றும் புகார் கூறினார். இதனை அடுத்து பா.ஜ.க. தொண்டர்கள் பத்து பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதனை கண்டிக்கும் விதமாக பா.ஜ.க. எம்.பி.அர்ஜூன்சிங் ”பா.ஜ.க. சார்பில் பத்துலட்சம் தபால் அட்டைகள் அனுப்பபடும் என்று சவால் விடுத்திருந்தார். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நேற்று பராக்பூர் தொகுதியில் காஞ்ஜப்பரா பகுதியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் மீண்டும் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது.

இதனை அடுத்து போலீஸார் தடியடி நடத்தி கோஷம் போட்ட கூட்டத்தை கலைத்தனர். கூட்டத்தில் இருந்து கலைந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள். இதனை தொடர்ந்து பா.ஜ.க. ஆதரவாளர்கள் 15 நிமிடங்கள் காஞ்சாப்பாரா ரயில்நிலையத்தில் ரயில்களை மறைத்து நிறுத்தினர். கைதுசெய்யப்பட்ட பா.ஜ.க.தொண்டர்களை விடுவிக்குமாறு போலீஸ்நிலையதின் முன்புதர்ணா போராட்டம் நடத்தினர்.

சில நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள், 50 கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களவையில் சீட் கேட்கும் பாஜக: பிடி கொடுக்குமா அதிமுக?