Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்:திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

Advertiesment
ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்:திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
, திங்கள், 10 ஜூன் 2019 (17:56 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான வாக்குகளை பெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க.வின் வெற்றி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் சம்பவங்களும் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் கவலையளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகிவுள்ளது.

இதனையடுத்து மேற்கு வங்க மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பதில் எழுதியுள்ளது. அந்த பதிலில் தற்போது எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை எனவும், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது எனவும் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளாரும் மேற்கு வங்க அமைச்சருமான பர்த்தா சாட்டர்ஜி, தேர்தலுக்கு பிந்திய வன்முறைகள் குறித்து சில கருத்துக்கள் கூறியிருப்பதாக தெரியவருகிறது.

பர்த்தா சாட்டர்ஜி தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சதி நடக்கிறது என்றும், மேலும் ஆட்சியை கைப்பற்ற சிலரால் சட்டத்துக்கு புறம்பான முறையில் முயற்சிகள் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளுக்கு ' கண்ணீர் அஞ்சலி' பேனர் ஒட்டிய தந்தையால் பரபரப்பு!