Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

Advertiesment
திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

Mahendran

, புதன், 19 பிப்ரவரி 2025 (17:11 IST)
திருப்பரங்குன்றம் மக்கள் சண்டை போடவில்லை என்றாலும், நீங்கள் வழக்குகளை போட்டு சண்டை போட வைத்து விடுவீர்கள் என்று திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவித்து அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர்.

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தளம் குறித்த அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து,  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து தர்ம பரிஷித் உள்ளிட்ட அமைப்புகள் திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலத்தை பற்றிய பல வழக்குகளை தொடர்ந்தன. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவான இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையின் முடிவில், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே, இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், "திருப்பரங்குன்றம் மக்கள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஆனால், நீங்கள் வழக்குகளை போட்டு சண்டை போட வைத்து விடுவீர்கள் போல!" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்?" என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைகள் வெட்டப்பட்ட நிலையில் 3 பெண் சடலங்கள்.. கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்..!