அமேசானில் செல்போன் ஆர்டர் செய்த இளைஞருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக டெலிவரி பாயே அதை திருடி விற்பனை செய்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த அந்த இளைஞர் அமேசான் தளத்தில் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த போன் அவருக்கு டெலிவரி செய்யப்படவில்லை. அதனால் அமேசான் கஸ்டமர் கேர் செண்டருக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ அந்த போன் உங்களிடம் கொடுக்கப்பட்டு விட்டது எனக் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான அவர் காவல்நிலையத்தில் புகாரளிக்க அவர்கள் நடத்திய விசாரணையில் டெலிவரி பாயே செல்போனை திருடி விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்த செல்போனையும் மீட்டு, புகார் அளித்தவரிடம் ஒப்படைத்தனர்.