புதுடெல்லியில் நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்த திருடன் அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் கோட்டை விட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
டெல்லியின் ஷாலிமார்பாக் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரின்கு ஜிண்டால், இவர் ஏற்கனவே வங்கி கொள்ளை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பின்னர் கடந்த டிசம்பரி விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுதலையான ரின்கு வருமானம் ஏதும் இல்லாததால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் மூழ்கியுள்ளார். வைத்திருந்த கொஞ்ச, நஞ்ச பணத்தையும் சூதாட்டத்தில் இழந்த ரின்கு, நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
அனுராக் கார் என்பவரின் நகைக்கடைக்குள் புகுந்த ரின்கு பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி கடையில் இருந்த 10 தங்க சங்கிலிகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் திருடன் ரின்குவை பிடித்தனர். ஆனால் அதற்கு 76 கிராம் செயினை விற்று பணம் பெற்ற ரின்கு அதில் 1.5 லட்ச ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி இழந்துள்ளார். அவரிடமிருந்த மீத தொகையை கைப்பற்றிய போலீஸார் அவரை கைது செய்து தொடர்து விசாரித்து வருகின்றனர்.