Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டில் இத்தனை போலி பல்கலைகழகங்களா? யுஜிசி எச்சரிக்கை

Advertiesment
நாட்டில் இத்தனை போலி பல்கலைகழகங்களா? யுஜிசி எச்சரிக்கை
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (16:56 IST)
நம் நாட்டில்  செயல்படும் போலி பல்கலைக் கழகங்களின் பட்டியலை  யுஜிசி இன்று வெளியிட்டுள்ளது.

நாட்டில் பல போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதால் பல மாணவர்கள் அதில் பணத்தைக் கட்டிச் சேருவதால் அவர்களின் படிப்புக் காலமும் வீணாகிறது.படிப்பு முடித்த பின்  உயர் கல்வியிலோ அல்லது வேலையிலோ சேரும்போதுதான், தாங்கள் படித்த பல்கலை போலி என்பதே தெரிகிறது.

இந்த  நிலையில்,  யுஜிசி எனும் மத்திய பல்கலை மானியக் குழு இன்று நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,  தலை நகர் டில்லியில் சுமார் 9 போலி பல்கலைக் கழகங்களும்   உத்தரப்பிரதேசத்தில் 4 , ஒடிசா-2,மேற்கு வங்க மா நிலம்-2, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரம், புதுச்சேயில் ஆகிய  மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக்கழங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 மேலும், இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்று   யுஜிசி மாணவர்களுக்கு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் இங்கு இருக்கும் வரை… அரசுக்கு எதிராக சீமான் சூளூரை!