டெல்லி மெட்ரோவில் இனி பயணம் செய்வது பயணிகளின் பாக்கெட்டுகளுக்கு சற்று சுமையாக இருக்கும். டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தனது ரயில் சேவைக்கான கட்டணத்தை இன்று முதல் திருத்தி அமைத்து அமல்படுத்தியுள்ளது. வழக்கமான வழித்தடங்களில் ஒரு பயணத்திற்கு ரூ.1 முதல் ரூ.4 வரை கட்டணம் அதிகரித்துள்ளது.
டெல்லியில் புதிய மெட்ரோ கட்டணங்கள்:
0–2 கி.மீ.: ரூ.11 (முன்பு ரூ.10)
2–5 கி.மீ.: ரூ.21 (முன்பு ரூ.20)
12–21 கி.மீ.: ரூ.43 (முன்பு ரூ.40)
21–32 கி.மீ.: ரூ.54 (முன்பு ரூ.50)
32 கி.மீ.க்கு அப்பால்: ரூ.64 (முன்பு ரூ.60)
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக கட்டணம் குறைவாக இருக்கும். ஆனால், தற்போது அந்த நாட்களில் அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ.50லிருந்து ரூ.54 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதியிலும் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.