Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. காளையின் பிடியில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Advertiesment
Indian Stock Market

Siva

, திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (09:52 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. குறிப்பாக, டிரம்பின் வரி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானபோது, பங்குச்சந்தை லேசாக ஆட்டம் கண்டது. இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 81,575 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 24,095 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து உயர்வுடன் வர்த்தகமாகி வரும் பங்குகளின் பட்டியலில் ஆசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்ளா, டாக்டர் ரெட்டி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ், ஜியோ ஃபைனான்ஸ், ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் முன்னிலை வகிக்கின்றன.
 
அதே சமயம், சில முக்கியப் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. சன் பார்மா, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல் மற்றும் அப்போலோ மருத்துவமனை போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. 
 
ஒட்டுமொத்தமாக, இன்றைய சந்தை நிலவரம் முதலீட்டாளர்களுக்கு ஒரு நேர்மறையான போக்கை காட்டியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்! - தமிழக அரசு உறுதி!