யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டெல்லி நகரம் மூழ்கியுள்ள நிலையில் குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
கடந்த சில காலமாக தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் டெல்லி நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், பள்ளிகள், தலைமை செயலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது.
பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு எழத் தொடங்கியுள்ளது. நீர்மட்டம் குறைந்தவுடன் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்க தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.