ஹனிமொனில் நண்டு குழம்பு சாப்பிட்ட புதுமண தம்பதிகள் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மணமகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	கரூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் கிருபா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் கன்னியாகுமாரி அருகே ஹனிமூன் சென்று இருந்தனர்
 
									
										
			        							
								
																	
	 
	அப்போது அவர்கள் தங்கியிருந்த விடுதியில் வழங்கப்பட்ட உணவில் நண்டு இருந்ததை அடுத்து அவர்கள் இருவரும் விரும்பி சாப்பிட்டனர். ஆனால் சில நிமிடங்களில் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவர்கள்  ஹோட்டல் ஊழியர்களின் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
	 
 
									
											
									
			        							
								
																	
	அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த நிலையில் மணமகள் கிருபா பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கணவர் தினேஷ் குமார் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்த நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து நண்டு உணவால் உயிர் இழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஹனிமூன் சென்ற இடத்தில் நண்டு சாப்பிட்டதால் மணமகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.