டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்து வருவதை அடுத்து அரசு அதிகாரிகளுக்கு நேற்று ஞாயிறு விடுமுறையை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லியின் பல பகுதிகளில் வெள்ள நீர் ஆக்கிரமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ள காரணத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு நேற்று ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கார்கள் இரு சக்கர வாகனங்கள் வெள்ள நீரில் மிதந்து செல்வதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு அரசு அதிகாரிகள் இரவும் பகலும் பணி செய்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. சாலைகளில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் இருப்பதால் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.