Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

Advertiesment

Mahendran

, ஞாயிறு, 22 ஜூன் 2025 (13:12 IST)
டெல்லியில் நேற்று மாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், 20 வயது இளைஞர் ஒருவர் மூன்று முறை சுடப்பட்டதால் படுகாயமடைந்துள்ளார். இது பண பரிமாற்றம் தொடர்பான தகராறால் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மானவ் சிங் என்ற 20 வயது இளைஞர் தனது நண்பர் ஒருவர் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட சண்டையில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், எதிர் தரப்பில் இருந்த நபர் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து மானவ் சிங்கை நோக்கி மூன்று முறை சுட்டுள்ளார். இதில் காயமடைந்த மானவ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டோம், விரைவில் கைது செய்யப்படுவார்," என்று தென்கிழக்கு துணை ஆணையர் ஹேமந்த் திவாரி உறுதிப்படுத்தினார். சம்பவ இடத்திலிருந்து வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்தச் சம்பவம் நடந்த பிறகு, ஆத் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவுத் தலைவரும், கால்காஜி எம்எல்ஏவுமான சௌரப் பரத்வாஜ் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அவர் பேசுகையில், "கால்காஜி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இத்தகைய சம்பவங்கள் இதற்கு முன் நடந்ததில்லை. டெல்லியில் இப்போது பாஜகவின் ஆட்சி செய்கிறது. டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!