டெல்லி துணைமுதல்வர் மணீஸ் சிசோடியாவில் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
டெல்லி யூனியனில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
கடந்தாண்டு, மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், மதுபான கொள்கை மோசடி புகாரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று மணீஸ் சிசொடியாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இத்குறித்து, சிசோடியா தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த சிபிஐ- ன் சோதனையை வரவேற்பதாகவும், அங்கு எதுவும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.