டெல்லி முதல்வர் மணிஷ் சிசோடியா நாளை ஆஜராக வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து நாளை அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்
இந்த சம்மனை ஏற்று அவர் நாளை காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் விசாரணை செய்த பின்னர் விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை என்றும் தெரிவித்தார்.