டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் திகார் சிறையில் சரணடைய உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் சிறையில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
மதுபான வழக்கில் சிக்கிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் எதிர்பால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக அவருக்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அந்த ஜாமீன் முடிவடைந்தது.
இதனை அடுத்து அவர் ஜாமீனை நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் திகார் சிறையில் சரணடைய உள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து கிளம்பி திகார் சிறைக்கு செல்ல இருப்பதாகவும் ஜூன் நான்காம் தேதி வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளை அவர் சிறையில் இருந்தே கண்காணிப்பார் என்றும் கூறப்படுகிறது.