Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்: தமிழக அரசு

மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்: தமிழக அரசு

Mahendran

, வெள்ளி, 24 மே 2024 (12:55 IST)
மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
புதிதாக ரேசன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது என்பதால் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் புதிய ரேசன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் ஏராளமான பொதுமக்கள் ரேசன் அட்டைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 கடந்த ஒரு ஆண்டாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்காததற்கு அவர்கள் மகளிர் உரிமைக்காக கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான் காரணமா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுமதி வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் குளிக்க தடை: குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தி..