Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊழல்கள் இருந்த போதும் எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கின்றன- பிரதமர் மோடி

Advertiesment
PM Modi
, செவ்வாய், 18 ஜூலை 2023 (14:25 IST)
தமிழ்நாட்டில் ஊழல்கள் இருந்த போதும் எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அந்தமான் போர்ட் பிளேயரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான  நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த கட்டிடத்தையை இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

பயணிகள் வருகை இங்கு அதிகரித்து வந்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.707.73 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை, மொத்தம் 40, 837 சதுர கிமீட்டர் பரப்பளவில் மேற்கொண்டுள்ளது.

மேலும், இந்த விமான நிலையத்தில் ஆண்டிற்கு 40 லட்சம் பயணிகள் கையாளும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

அந்தமானில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான  நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,’’  பாஜக அரசு, கடல் வழியே கேபிள் மூலம் இணையதள சேவைகளை அந்தமானுக்கு கொண்டு  வந்துள்ளோம். போர்ட் பிளேயரில் மருத்துவக் கல்லூரி கட்டியுள்ளோம். பெங்களூரில் எதிர்க்கட்சிகள் ஊழலை ஊக்குவிக்க கூட்டம் கூடியுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏறுவதற்கு முன் அந்தமானில் மூவர்ணக் கொடி ஏறிவிட்டது. இங்கு சில அடிமைத்தள அடையாளங்கள் இருந்தன. அவற்றை நீக்கிவிட்டோம்..

ஆனால், எதிர்க்கட்சிகளின் தாரக மந்திரம் குடும்பத்திற்கானதாக மட்டும் இருக்கிறது.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் ஊராட்சித் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறை பற்றி எதிர்க்கட்சிகள் பேசவில்லை,. தமிழ் நாட்டில் ஊழல் வழக்குகள் உள்ளபோதிலும் எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு ஆதரவளிக்கின்றன’’ என்று தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாகவி பாரதியாரின் தங்கை மகன் காலமானார்- அண்ணாமலை இரங்கல்