Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாகவி பாரதியாரின் தங்கை மகன் காலமானார்- அண்ணாமலை இரங்கல்

Advertiesment
bharathi relation
, செவ்வாய், 18 ஜூலை 2023 (13:35 IST)
மகாகவி பாராதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் அவர்களின் மகன் கிருஷ்ணன் இன்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை இரஙல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் அவர்களின் மகன் திரு. கிருஷ்ணன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இசைத் துறைப் பேராசிரியராகவும், பன்மொழிப் புலமை பெற்றவராகவும் விளங்கியவர். பாரதியாரின் கவிதைகளை ஹிந்தியில் சிறப்பாக மொழிபெயர்த்து பெருமை சேர்த்தவர்.

நான் வாரணாசிக்கு சென்றிருந்த போது மகாகவியின் சகோதரியின் பேரனான திரு.ரவிக்குமார் அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து அவர்களுடன் உரையாடியது, இன்றும் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கிறது.

திரு. கிருஷ்ணன் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு,   தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ’’என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்