Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோட்டில் 95,692 ஆயிரம் பேர் கண்காணிப்பில் ...மாவட்ட ஆட்சியர் தகவல்!!

Advertiesment
ஈரோட்டில் 95,692  ஆயிரம் பேர் கண்காணிப்பில் ...மாவட்ட ஆட்சியர் தகவல்!!
, வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (17:27 IST)
தமிழகத்தில் 234 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு  மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே தற்போது தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், முக்கியமாக 3684 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 411 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வெளிவரவில்லை எனவும், 7 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், 1590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை தமிழகத்தில் 2,10,538 பேரிடம் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், 23,689 பேரைத் தனிமைப்படுத்த வார்டுகள் தயராக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இதுதவிர, ஈரோடு மாவட்டத்தில் 95,692 பேர் ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மல்டிபிள் லாக் இன்: வாடஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்!!