நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள நடைமுறைகளிலிருந்து சிலவற்றை நீக்கியும், புதிய முறைகளை இணைத்தும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் சமூக வலைத்தளங்களிலும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கருத்துக்கள் அதிக அளவில் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்கள் இடையே நாளை மாலை 4:30 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. இந்த கவ்லி முறை மீது எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.