விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக அவரது ஆறு சொகுசு கார்களை விற்றுக்கொள்ள இந்திய அமலாக்கத்துறைக்கு இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பியோடினார் கிங் ஃபிஷர் நிறுவன முதலாளி விஜய் மல்லையா. இதனால் அவர் மீது பலப் பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தற்போது லண்டனில் இருந்து அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத்துறை எடுத்து வருகிறது. மேலும் அவர் மீதான வழக்கும் லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்க்கு சொந்தமான ஆறுச் சொகுசு கார்களை விற்றுக்கொள்ள அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருக்கும் அவரது வீடுகளை சோதனையிட்டு அதில் உள்ள பொருட்களையும் ஏலத்தில் விட்டுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
விஜய் மல்லையாவின் சொகுசு கார்கள் விவரம்
1.2016 மினி கண்ட்ரிமேன்
2.2012 மேபக்
3.2006 பெர்ராரி F430
4.2014 ரேஞ்ச் ரோவர்
5..பெராரி F512M
6.போர்ஷ் கேயேன்
மேலும் ஒவ்வொரு காரையும் குறைந்தபட்சம் 3 கோடியே 40 லட்சத்துக்கும் மேல்தான் விற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.