Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கிகளுக்கான சுவீட் செய்தி... பண மோசடி 'மல்லைய்யா' இந்தியாவுக்கு திரும்பப் போறாரு...

Advertiesment
வங்கிகளுக்கான சுவீட் செய்தி... பண மோசடி 'மல்லைய்யா' இந்தியாவுக்கு  திரும்பப் போறாரு...
, வியாழன், 11 அக்டோபர் 2018 (19:07 IST)
எப்போதும் குடியும் கூத்துமாகவே பத்திரிகைகளில் காட்சியளிக்கும் அந்த நபர் .ஒரு பிரபல மதுபான முதலாளியாகவும் இருந்தார். கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற விமான சேவையையும் தொடங்கினார். 

அதுமட்டுமா உலக புகழ் பெரும் பணம் புழங்கிப்புரளும் விளையாட்டான பார்முலா 1  கார் பத்தயத்தையும் சில வருடங்களுக்கு நடத்தினார். எத்தனையோ சொகுசு விடுதி.. கையில் எப்போது அழகு மங்கைகள் என வயதான குண்டு மன்மதனாகவே வலம் வந்தவருக்கு அந்த பணமே எமனாக  மாறிவிட்டது.அத்தனையும் இன்று ஏலத்திற்கும் வந்துவிட்டது.
 
ஆம் நாம் இவ்வளவு நேரம் பேசியது பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்திய வங்கிகளில்  ஏமாற்றிக்கொண்டு இங்கிலாந்துக்கு தப்பிஓடிய விஜய் மல்லையா தான்.
எப்படியாவதும் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் இந்திய அரசு குறிப்பாக பா.ஜ.க. மிகவும் குறியாக இருக்கிறது. 
 
இந்நிலையில் மல்லைய்யாவை இந்தியாவிற்கு அனுப்புவது குறித்து லண்டன் நீதிமன்றம் வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஐய் மல்லையாவை இந்தியாவிற்குகொண்டு வரும் பட்சத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள  லோக்சபா தேர்தல் பாஜக அரசுக்கு பெரும் பலமாக அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வங்கிகளுக்கான சுவீட் செய்தி... பண மோசடி மல்லைய்யா இந்தியாவுக்கு  திரும்பப் போறாரு...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நரேந்திர மோடியை பற்றி அப்படி என்னதான் சசி தரூர் எழுதி தள்ளியிருக்கிறார்...?