Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யன் கானை கைது செய்த வான் கடேவை சிபிஐ கைது செய்ய மேலும் 2 வாரம் விலக்கு- நீதிமன்றம்

aryan khan
, வியாழன், 8 ஜூன் 2023 (14:10 IST)
ஆர்யன் கானை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீன் வான் கடேவை சிபிஐ கைது செய்யும் நடவடிக்கையில் இருந்து மேலும் 2 வாரம் விலக்கு அளித்து மும்பை உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் கார்டெல்லா க்ரூஸ் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
முதலில் அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மட்டும் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அறிக்கை அளித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆர்யன் கான் நிரபராதி என்று தெரிவித்தது.

இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீன் வான் கடேவை சிபிஐ கைது செய்யும் நடவடிக்கையில் இருந்து மேலும் 2 வாரம் விலக்கு அளித்து மும்பை உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது.

மேலும், தான் நிரபராதி, தன் மீது திட்டமிட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சமீர் வான்கடே மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடையை மேலும் 2  வாரங்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராம்தாஸ்