Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஜினி பட நடிகை தற்கொலை வழக்கு; நடிகர் சூரஜ் விடுதலை

gajini
, வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (22:34 IST)
கஜினி பட நடிகை படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில்  பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை  ஜிஹா கான் (25). இவர் மும்பையில் குடியேறிய பின்  ராம் கோபால் வர்மாவின் நிஷாபாத் என்ற படம் மூலம் 2007 ஆம் ஆண்டு  சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  கஜினி படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ஜிஹா கான் மும்பையின் ஜூஹீ நகரில் தன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

ஜிஹா கான் தற்கொலை கடிதத்தை போலீஸார் கைப்பற்றிய நிலையில்,  அவரது காதலன் சுராஜ் பன்ஜொலியை கடந்த 2013 ஜூன் மாதம் கைது செய்தனர்.

அதன்பின்னர் ஜூலை மாதம் சுராஜ் விடுதலையானார். அதன்பின்னர், 2018 ஆம் ஆண்டு நடிகர் சுராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்,  இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில், நடிகர் சுராஜ்  குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து, அவரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைகீழா தொங்கி வெறித்தனமான ஒர்கவுட் பண்ணும் ஜோதிகா - வீடியோ!