பசுமை விவசாயம் என்ற பெயரில் சிறுமிகளின் ஆபாச படங்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்த தஞ்சையை சேர்ந்த நபர் ஒருவர் மீது விசாரணை நடந்து வருவதாக செய்தி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த நபர் ஒருவர் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் சேகரிப்பு என்ற பெயரில் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் இவ்வாறு சுற்றுச்சூழலில் பி.எச்.டி முடிக்க ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இவர் பசுமை விவசாயம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் இருந்தாலும் அவரது உண்மையான தொழில் சிறுமிகளை ஆபாசமாக படமெடுத்து அதன் வீடியோக்களை சமூக வலைத்தள குழுவில் பகிர்ந்து பணம் சம்பாதித்ததாகவும், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளிநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இண்டர்போல் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து விக்டர் ஜேம்ஸ் ராஜா என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இவர் 21 மாநிலங்களில் ஒரு குழுவை ஏற்படுத்தி அந்த குழுவின் மூலம் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது தற்போது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.