Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

Advertiesment
வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

Mahendran

, வியாழன், 20 பிப்ரவரி 2025 (13:20 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட இருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதற்கு வரம்புகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்னிருந்தன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இதனை கருத்தில் கொண்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
 
இந்த சட்டத்தின் படி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் விவசாய மற்றும் தோட்ட நிலங்களாக இருப்பதால், அங்கு வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதற்கு தடை விதிக்க புதிய சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா சட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
உத்தரகாண்ட் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, மாநில வளங்களை பாதுகாக்க புதிய நில சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். மாநிலத்தின் அடையாளத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்றும், மக்கள் நலன்களை பாதுகாக்க அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை