Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபரில் உச்சம் தொடும் மூன்றாவது அலை? – விஞ்ஞான குழு எச்சரிக்கை!

Advertiesment
அக்டோபரில் உச்சம் தொடும் மூன்றாவது அலை? – விஞ்ஞான குழு எச்சரிக்கை!
, ஞாயிறு, 4 ஜூலை 2021 (09:16 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அக்டோபரில் மூன்றாவது அலை உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக தினசரி 4 லட்சம் பாதிப்புகள் என பதிவான நிலையில் தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே கணிப்பதற்காக மத்திய அரசு அமைத்த 3 பேர் கொண்ட விஞ்ஞான குழு தெரிவித்துள்ள தகவலில் இந்தியாவில் மூன்றாவது அலை கொரோனா பரவினால் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் உச்சமடையும் என தெரிவித்துள்ளது.

போதிய கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் பாதிப்பு தினசரி அளவு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலும், உச்சமடையும்போது 2 லட்சம் வரையிலும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தனையாவது அலை வந்தாலும் எதிர்க்கும் வலு உள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்