Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Advertiesment
PM Modi

Prasanth K

, புதன், 11 ஜூன் 2025 (17:12 IST)

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் மீண்டும் ஆசிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் இனி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க செல்பவர்கள், முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

இன்று டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சிறப்பிக்கும் விதமாக டெல்லி முதலமைச்சர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடியின் வீட்டில் விருந்து வழங்கப்படுகிறது. பிரதமரை சந்திக்க செல்லும் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!