Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

99 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

99 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
, திங்கள், 14 டிசம்பர் 2020 (09:39 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 27,071 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 98,84,100 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 336 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,43,355 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 93,88,159 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,52,586 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

41 தொகுதிகள் தருபவர்களுடன் கூட்டணி: பேரத்தை முன்வைத்த பிரேமலதா?