தனக்குள் இருந்த இசையமைப்பாளர் கனவை நிறைவேறியுள்ள ஜெய் கொரோனா ஊரடங்குக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் சமயத்திலேயே இரண்டு படங்களின் ஷூட்டிங்கை முடித்தார் சுசீந்தரன். அந்த இரண்டு படங்களிலுமே ஜெய்தான் கதாநாயகனாக நடித்தார். அதில் ஒரு படத்துக்கு ஷிவ ஷிவா எனப் பெயரிடப்பட்டது. அந்த படத்தின் மூலம் ஜெய் இசையமைப்பாளராகாவும் அறிமுகமானார். இந்நிலையில் இசையமைப்பாளரானது குறித்து அவர் பேசியுள்ளார்.
அதில் சிறுவயதில் நான் அதிக நாட்களை ஒலிப்பதிவு கூடத்தில் கழித்துள்ளேன். அதில் பாட்ஷா அண்ணாமலை ஆகிய படங்களும் அடக்கம். நடிக்க வரவில்லை என்றால் நான் இசையமைப்பாளனாகதான் ஆகி இருப்பேன். கொரோனா ஊரடங்குக்கு நன்றி. எனக்குள் இருந்த இசைக் கலைஞனை உயிர்ப்பித்துள்ளது எனக் கூறியுள்ளார்.