Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.10 கோடியை நெருங்கிய பாதிப்பு எண்ணிக்கை! – இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:50 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,264 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,09,91,651 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 90 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,56,302 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,06,89,715 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,45,634 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments