கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாழும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன
காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோர், பாஜக சார்பாக பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்ட வரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்றும் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளது
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் பாஜக 79 முதல் 89 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்