Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 நாட்கள் மதுபான கடைகளை மூட வேண்டும்: ஆட்சியரிடம் பாஜக மனு

5 நாட்கள் மதுபான கடைகளை மூட வேண்டும்: ஆட்சியரிடம் பாஜக மனு
, செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (14:18 IST)
மதுரை மாவட்டத்தில் ஐந்து நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் இடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 5 முதல் மே 9 வரை 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் போதையில் வரும் நபர்களால் சட்டவிரோத செயல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் மே 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீடு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!