மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறையில் உள்ளது என்பதும் இதில் பல குழப்பங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறி காட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.
ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் முறை பெருவாரியான மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர் சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி முறை கடுமையான பாதிப்பை சந்திப்பதாக தெரிவித்தார்.
மேலும் நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.