Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரம் பேசும் பாஜக: ஆடியோ வெளியிட்ட காங்கிரஸ்!

Advertiesment
பேரம் பேசும் பாஜக: ஆடியோ வெளியிட்ட காங்கிரஸ்!
, வெள்ளி, 18 மே 2018 (20:18 IST)
கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
 
அதன்படி கர்நாடக முதல்வராக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நேற்று காலை பதவியேற்றார். இந்நிலையில் இது புது திருப்பமாக உச்ச நீதிமன்றம் நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா தனது பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 
 
இதற்கு முன்னரே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி ரூபாய் தருவதாக பாஜக பேரம் பேசிவருவதாக, மஜதவின் குமாரசாமி குற்றம்சாட்டியிருந்தார். 
 
இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக சார்பில் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.
 
நாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், பாஜக உள்ள நிலையில், காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரச குடும்ப திருமணம்: சுவாரஸ்ய தகவல்கள்...