உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணியிடம்( 78+37 - 115 இடங்கள்) போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பாஜக வை சேர்ந்த எடியூரப்பாவை( 104 இடங்கள்) முதல்வராக ஆளுநர் நியமித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இது பாஜக வினரிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், உச்சநீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது எனவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் பேசியுள்ளார்.