Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா!

சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா!

J.Durai

மதுரை , புதன், 5 ஜூன் 2024 (17:17 IST)
மதுரை மாவட்டம்,  திருவேடகம் அருகே, வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில்,15 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
 
வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை விக்னேஸ்வர பூஜையுடன் யாகவேள்வி தொடங்கி நடைபெற்றது.
 
தொடர்ந்து, பூர்ணாகதி சதுர்வேத பாராயணம், நடைபெற்று மகா தீபாரதனையுடன் முதல் கால யாக பூஜை நிறைவு பெற்றது. 
 
அதனைத் தொடர்ந்து, 4ம் தேதி காலை 10 மணிக்கு மேல் இரண்டாவது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி அளவில் கடம் புறப்பாடாகி 15 ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது.
 
அதனைத் தொடர்ந்து, சாய்பாபாவுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. தீபாராதனை காட்டப்பட்டது .
 
இதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில், பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொகுதியில் காலை கூட வைக்கல.. ஜெயிலில் இருந்தபடியே வென்ற சுயேட்சை! – யார் இந்த அம்ரித்பால் சிங்?