Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிபதி முன்பு விஷம் அருந்தி முன்னாள் ராணுவ தளபதி தற்கொலை

நீதிபதி முன்பு விஷம் அருந்தி முன்னாள் ராணுவ தளபதி தற்கொலை
, வியாழன், 30 நவம்பர் 2017 (12:55 IST)
போர்க்குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமானதால் நீதிபதி முன்னே விஷம் அருந்தி போஸ்னியாவின் முன்னாள் ராணுவ தளபதி ஸ்லோபோதன் ப்ரால்ஜக் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 1992 - 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா தீர்ப்பாயம் ஒன்றை அமைத்தது.  இந்த போர் நடைபெற்ற சமயத்தில் போஸ்னிய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி,  தீர்ப்பாயம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
 
இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் சர்வதேச நீதிமன்றம், குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் 20 ஆண்டுகள் சிறை தண்டைனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.இதனால்,அதிர்ச்சி அடைந்த ஸ்லோபோதன் ப்ரால்ஜக், தான் நிரபராதி என கூறியவறே,  நீதிபதி கண்முன்னே தான் மறைத்து வைத்திருந்த குப்பியில் உள்ள  விஷத்தை எடுத்து குடித்தார்.
 
மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்து ஹேக் நகர போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கிய அன்புச்செழியன் - திரையுலகினர் அதிர்ச்சி