Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனா, பாகிஸ்தானை சமாளிக்க இரண்டரை மணி நேர போர். ராணுவ தளபதி

சீனா, பாகிஸ்தானை சமாளிக்க இரண்டரை மணி நேர போர். ராணுவ தளபதி
, வெள்ளி, 9 ஜூன் 2017 (01:05 IST)
ஒருபக்கம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இந்திய வீரர்களை கொன்று தலையையும் வெட்டி எடுத்து செல்கின்றனர். இன்னொரு பக்கம் சீனா ஹெலிகாப்டரில் அத்துமீறி நுழைந்து தொல்லை கொடுத்து வருவதோடு அருணாச்சல பிரதேச மாநிலத்தையும் உரிமை கோருகிறது.



 


இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தடுப்பு நடவடிக்கை குறித்தும்  எல்லையில் இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு, தலைமைத் தளபதி பிபின் ராவத் பேட்டி அளித்தார்.

இந்த பேட்டியில் ‘’உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் போரிடும் சூழல் வந்தாலும் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இந்திய ராணுவம் உள்ளது. புதியதாக ஆள் சேர்ப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், இரண்டரை மணி நேர குறுகிய போர் ஒன்றை நடத்தவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது,’’ என்று, பிபின் ராவத் கூறியுள்ளார். இந்த பேச்சு, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய கிரகத்திற்கு பெங்களூர் மாணவி பெயர்: அமெரிக்கா கொடுக்கும் கெளரவம்