இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்று ஒருபக்கம் மத்திய , மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் வறுமையின் காரணமாக இன்னும் பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வேலைக்கோ அல்லது வியாபரத்திலோ ஈடுபட செய்து கொண்டுதான் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற குமாரசாமி ராம்நகர் நோக்கி இன்று காரில் சென்று கொண்டிருந்தபோது கையில் பூக்கூடையுடன் ஒரு சிறுமி பூ வியாபாரம் செய்து வந்ததை பார்த்தார். உடனடியாக காரை நிறுத்த செய்து அந்த சிறுமியிடம் பேசிய முதல்வர் குமாரசாமி, அந்த குழந்தை பள்ளியில் சேர்ந்து படிக்க ஆவண செய்யும்படி தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அந்த சிறுமியிடம் பெற்றோரை அழைத்து கொண்டு தன்னை முதல்வர் அலுவலகத்தில் சந்திக்கும்படி கோரினார். முதல்வரின் இந்த கருணை உள்ளம் குறித்து சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.