பேருந்தில் பட்டாக்கத்தி : மாணவர்களை வெளுத்த பெற்றோர்கள் (வீடியோ)

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (16:59 IST)
சென்னையில் பேருந்துகளில் பட்டா கத்தியுடன் பயணம் செய்த மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
நேற்று காலை தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. சென்னை பிராட்வேயிலிருந்து காரனோடைக்கு செல்லும் 57F பேருந்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று கொண்டு கையில் பட்டா கத்திகளை வைத்துக்கோண்டு தரையில் தேய்த்துக்கொண்டே செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது.

 
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈட்டுபட்டிருந்தனர்.
 
இந்நிலையில், அவர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு அந்த மாணவர்களின் பெற்றோர் அவர்களை கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மலையை குடைந்ததில் சுண்டெலிகூட சிக்கவில்லை: மோடி அரசை சாடும் சிவசேனா