ஸ்டார் ஹோட்டலை கொரோனா வார்டாக மாற்றினாரா ரொனால்டோ? – Fact Check

புதன், 25 மார்ச் 2020 (13:20 IST)
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்பந்து வீரர் ரொனால்டோ தனது நட்சத்திர ஹோட்டலை மருத்துவமனையாக மாற்றியுள்ளதாக வாட்ஸ் அப் செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது. ஆரம்பத்தில் சீனாவில் அதிக உயிரிழப்புகள் இருந்தாலும் வேகமாக அதிகரித்த உயிரிழப்புகளால் சீனாவை மிஞ்சியுள்ளது இத்தாலி.

இந்நிலையில் கொரோனா குறித்த பல்வேறு தவறான செய்திகளும் இணையத்தில் உலா வருகின்றன. சமீபத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோ தனது நட்சத்திர ஹோட்டலான சிஆர்7-ஐ மருத்துவமனையாக மாற்றியிருப்பதாகவும், அதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் பகிரப்பட்டது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள சிஆர்7 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் தங்களது நட்சத்திர ஹோட்டல் மருத்துவமனையாக மாற்றப்படவில்லை என்றும், நட்சத்திர ஹோட்டல் வழக்கம் போல செயல்படுகிறது. தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் Hydroxychloroquine மாத்திரைகள் ஏற்றுமதிக்கு தடை!