Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

உருட்டுக்கட்டையோடு நுழைந்த சீன வீரர்கள்! மோதிய இந்திய வீரர்கள்! – எல்லையில் மீண்டும் பரபரப்பு!

Advertiesment
indian army
, செவ்வாய், 27 டிசம்பர் 2022 (10:36 IST)
இந்திய – சீன எல்லையில் தொடர் பரபரப்பு நிலவி வரும் நிலையில் தற்போது சீன வீரர்கள் சிலர் ஆயுதங்களோடு எல்லைக்குள் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – சீனா இடையே கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு பின் எல்லைப்பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது. சீனா எல்லைப்பகுதியில் குடியேற்றங்களை அதிகப்படுத்தி வரும் நிலையில் இந்தியாவும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லைப்பகுதியில் ஆணி அடித்த கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு 200 சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் கையில் துப்பாக்கி இல்லை. அவர்களை இந்திய ராணுவத்தின் 50 பேர் கொண்ட குழு எதிர்கொண்ட நிலையில் இதுகுறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் உடனடியாக இரண்டாவதாக ஒரு குழுவும் எல்லைப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு சீன ராணுவ வீரர்களும், இந்திய வீரர்களும் துப்பாக்கிகளை உபயோகிக்காமல் கட்டைகளாலும், கைகளாலும் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 200க்கும் அதிகமான இந்திய வீரர்கள் இருந்ததால் சீன வீரர்கள் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் எல்லைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூரியர் பார்சலில் வந்த மிக்ஸி திடீரென வெடித்ததால் பரபரப்பு: ஒருவர் காயம்