Publish Date: Tue, 27 Dec 2022 (09:49 IST)
Updated Date: Tue, 27 Dec 2022 (09:51 IST)
சூர்யகுமார் தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் டி 20 பேட்ஸ்மேன்களில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். டிவில்லியர்ஸுக்கு பின்னர் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அழைக்கப்பட்டு வருகிறார்.
இப்படி மைதானத்தின் 360 டிகிரியிலும் விளையாடும் வாய்ப்பு எப்படி வந்தது என்பது பற்றி அவர் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் “நான் பள்ளி காலத்தில் விளையாடும் போது லெக் சைட் பவுண்டரியை விட ஆஃப் சைட் பவுண்டரி நீளம் குறைவாக இருக்கும். அதனால் ஆஃப் சைட் பவுண்டரி அடிப்பதை தடுக்க பவுலர்கள் உடலை குறிவைத்து வீசுவார்கள். அந்த பந்துகளில் பவுண்டரி அடிக்க அப்பர் கட், மணிக்கட்டுகளை சுழற்றி அடிக்கும் ஷாட்கள் என அடித்துப் பழகினேன். இப்படிதான் எனக்கு 360 டிகிரி ஆட்டம் பழக்கமானது” எனக் கூறியுள்ளார்.