தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவு, ஊரடங்கு உத்தரவில் கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	அதேபோல் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இந்த ஆலோசனையின் போது தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்த பின் தமிழகத்திற்கு சில வழிகாட்டுதல்களை அவர் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
 
									
										
			        							
								
																	
	 
	கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் தமிழகத்தில் மிக அதிகமாக இருக்கிறது என்பதும் மகாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில் தான் மிக அதிகமான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.